ஜேஎன்யூவில் அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய இடதுசாரி மாணவர்கள்.. மாபெரும் வெற்றி!
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி மாநில தேர்தலுக்கு நிகராக எப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் பார்க்கப்படும். பல அரசியல் தலைவர்களை இந்த தேர்தல் உருவாக்கி உள்ளது. தற்போது இருக்கும் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்தான்.
இங்கு இடதுசாரி அமைப்புகள் வெற்றிபெறுவது ஒரு தோல்வியாக மத்திய பாஜக அரசால் பார்க்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு மாணவர் சங்க தேர்தல் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது.
|
மாணவ தலைவர்
தற்போது அங்கு மாணவ தலைவராக என். சாய் பாலாஜி என்ற மாணவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் 2617 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் இடதுசாரிகளின் கூட்டமைப்பை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த லலித் 982 வாக்குகள் பெற்றுள்ளார்.
|
துணை தலைவர்
அதேபோல் துணை தலைவர் பதவியையும் இடதுசாரி அமைப்புகளே வென்றுள்ளது. இடதுசாரி அமைப்பை சேர்ந்த சரிகா 2692 வாக்குகள் வென்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த கீதா 1012 வாக்குகள் பெற்றுள்ளார்.
|
பொதுச்செயலாளர் பதவி
முக்கியமான இன்னொரு பதவியான பொதுச்செயலாளர் பதவியயையும் இடதுசாரி அமைப்புகளே வென்றுள்ளது. இடதுசாரி அமைப்பை சேர்ந்த ஏஜாய் 2423 வாக்குகள் வென்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த கணேஷ் 1123 வாக்குகள் பெற்றுள்ளார்.
|
துணை பொதுச்செயலாளர் பதவி
அதேபோல் துணை பொதுச்செயலாளர் பதவியயையும் இடதுசாரி அமைப்புகளே வென்றுள்ளது. இடதுசாரி அமைப்பை சேர்ந்த அமுதா 1839 வாக்குகள் வென்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த வெங்கட் 1116 வாக்குகள் பெற்றுள்ளார்.
|
மாபெரும் வெற்றி
இந்த தேர்தலில் பாஜக அரசு அதிக அளவில் தலையிடுவதாகவும், கல்லூரி நிர்வாகத்தில் அவர்களின் விருப்பங்களை திணிக்க முயல்வதாகவும் இடதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகள் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. அதை எல்லாம் தாண்டி தற்போது மீண்டும் ஒரு முறை இடதுசாரி அமைப்புகள் வென்றுள்ளது. இதனால் அங்கு பெரிய பெரிய கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது.