சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் ஜெயலலிதா.. நாளை மனு தாக்கல்?
பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீ்ன் இல்லை என்று முடிவாகி விட்ட நிலையில் அடுத்து உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தரப்பு நாடவுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஜெயலலிதா தரப்புடன் விவாதித்துவி்ட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும் அறிவித்துள்ளார்.
அனேகமாக நாளையே மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வந்தன. எல்லாமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பது போலவே தோன்றியது. அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் கூட ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் நீதிபதி அதிரடியாக ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து வி்ட்டார். இதனால் ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து உச்சநீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். அந்த வேலையை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications