எத்தனையோ பார்த்துவிட்டேன்... ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு எனக்கு 'ஜூஜுபி': பவானிசிங்
பெங்களூர்: நான் எத்தனையோ சவாலான வழக்குகளை சந்தித்துள்ளேன். 1974-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வாதாடியுள்ளேன். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு எனக்கு மிகவும் சாதாரணமானது என்று சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானிசிங் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் முதல்வராக இருந்த போதே அவர்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். அதில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கச் செய்திருக்கிறேன்.
ஆனால் அந்த வழக்குகளில் எந்த பிரச்சினையும் சந்திக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் என்று கூறியுள்ளார்.

பணம் வாங்கிவிட்டேனோ?
இந்த வழக்கில் நான் பணம் வாங்கிவிட்டதாக கூறுகின்றனர். எனக்கு யார் பணம் கொடுத்தார்கள்? ஜெயலலிதா வழக்கில் 100 சதவீதம் அக்கறை காட்டினேன். இந்த வெற்றியின் மூலம் என் மீது சுமத்தப்பட்ட அத்தனை பழிகளும் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்னை குறை சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
நான் யார் வழக்கறிஞர்?
ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்று திமுகவினர் என் மீது சுமத்திய அத்தனை பழிகளுக்கும் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லி விட்டேன். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி என்னை பார்த்து, ''நீ ஒரு திமுக வழக்கறிஞர்'' என கோபமாக கூறினார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப்போகிறார்?
மிரட்டல் பழகிவிட்டது
பல்வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து தமிழில் ஏதேதோ பேசுவார்கள். பதிலுக்கு எனக்கு தெரிந்த சிவாஜிநகர் தமிழில் நானும் ஏதோ பேசுவேன். இப்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. அவர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் படித்தது கிரிமினாலஜி. பார்ப்பது கிரிமினல் வழக்கறிஞர் தொழில். தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டுவரும் எத்தனையோ கிரிமினல்களை பார்த்து விட்டேன்.
எனக்கு ஏற்கனவே தெரியும்
இப்படி தான் தீர்ப்பு வருமென்று எனக்கு ஏற்கெனவே தெரியும். ஏனென்றால் வழக்கில் ஆதாரங்களும், ஆவணங்களும், சாட்சியங்களும் வலுவாக இருந்தன. எனது ஆணித்தரமான வாதமும் வழக்குக்கு வலுசேர்த்ததால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.
கண் கலங்கிய ஜெ
நீதிபதி தீர்ப்பை வாசித்த போது ஜெயலலிதா மிகவும் அதிர்ந்து போய் இருந்தார். கண் கலங்கி, சாந்த சொரூபியாக மாறியிருந்தார்.
முதன் முதலாக பார்த்தேன்
ஜெயலலிதாவை சின்ன வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். தீர்ப்பு வெளியான செப்டம்பர் 27-ம் தேதி தான் முதன் முதலாக ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன். அப்போது அவரும் எதுவும் பேசவில்லை. அதனால் நானும் எதுவும் பேசவில்லை.
அனுபவம் இல்லாத வழக்கறிஞர்கள்
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நன்றாக வாதிடுவார். அவர் சுங்கவரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் அனுபவம் மிக்கவர். ஆனால் இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமே இல்லாதவர். சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் வாதிட்டதை விட நீதிபதியை கோபமூட்டியது தான் அதிகம். மற்றபடி அசோகன், செந்தில் எல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியே பார்த்ததில்லை.
ஆட்சேபிக்காதது ஏன்?
தண்டனையை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை கடுமையாக ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தேன். ஆனால் ராம்ஜெத்மலானி தனது வாதத்தில் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையை பெற்றிருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞரின் வாதமே தேவையில்லை. நீதிபதி தனது சுய அதிகாரத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்றார். எனவே, நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபிக்கவில்லை என்று நான் தெரிவித்தேன். ஓர் அரசு வழக்கறிஞர் தனது சொந்த கருத்தை மட்டுமல்ல அரசு மற்றும் சமூகத்தின் கருத்தையும் எதிரொலிக்க வேண்டும். எனது மனசாட்சிப்படி நடந்து கொண்டேன் என்றார் பவானிசிங்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications