For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுபமாக முடிந்த ஜெயலலிதா வழக்கு!

By Chakra
Google Oneindia Tamil News

ஜெ.வை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து

சிறப்பு நீதிமன்ற நீதிபதி போட்ட 150 முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிட்டனவா?: கருணாநிதி கேள்வி

சசிகலா வழக்கறிஞரிடம் நீதிபதி குமாரசாமி 150 முடிச்சுகள் குறித்து கூறியிருந்தார்- கருணாநிதி

ஜெ. வழக்கில் இதுவே இறுதி தீர்ப்பு அல்ல என ஆச்சார்யா கூறியுள்ளார்- கருணாநிதி

நீதிமன்றத்துக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி எனும் நீதிமன்றமே- கருணாநிதி

கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது : ஜெ. அறிக்கை

நான் எந்தத் தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு : ஜெயலலிதா

என மீதான அவதூறை நீக்கிய தீர்ப்பு : ஜெயலலிதா

சாமி தரிசனத்துக்காக மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல உள்ளார் ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் விடுதலை செய்துள்ளதால் சாமி தரிசனம்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்?

கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு பங்கேற்கிறார் ஜெயலலிதா?

இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகப் போவதாகவும் தகவல்

ஜெயலலிதாவுடன் டிஜிபி அசோக்குமார், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் சந்திப்பு

பதவி ஏற்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

எந்த அதிகாரியையும் சந்திக்காமல் இருந்தார் ஜெ...

இன்று மாலை பதவி விலகுகிறார் ஓ.பன்னீர் செல்வம்?

வருமானத்துக்கு உரிய சான்றுகளை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் விடுதலை- ஜெ. வக்கீல் குமார் பேட்டி

எதிர்தரப்புக்கு நேரில் வாதிட வாய்ப்பே கொடுக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது- ஆச்சாரியா

எழுத்துப்பூர்வ வாதத்தைவிட நேரில் வாதிடுவதே சிறப்பான வாதமாக அமையும்- ஆச்சாரியா

தீர்ப்பைக் கேட்டு ஷாக் ஆகி விட்டேன் - சுப்பிரமணியம் சாமி

இருப்பினும் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக மாட்டேன் - சாமி

கர்நாடக அரசு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் அவருக்கு உதவியாக இருப்பேன் - சாமி தகவல்

முதல்வராகும் ஜெ.. தமிழக சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல்?

தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி இது - சரத்குமார் கருத்து

சட்டத்தை மதித்து அமைதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா - சரத்குமார்

சந்தில் சிந்து பாடி விடலாம் என்று நினைத்தவர்களின் நினைப்பு தோல்வியுற்று விட்டது - சரத்குமார்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அப்பீல் செய்யும் - ஆச்சார்யா

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்

எம்எல்ஏக்கள் கூடி அவரை முதல்வராக தேர்வு செய்வர்

விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் முதல்வராக திட்டம்

அடுத்த 6 மாதத்தில் தேர்தலை சந்தித்து எம்எல்ஏ ஆக அவகாசம் உள்ளது

சட்டமன்றத் தேர்தலையே முன் கூட்டி நடத்திவிடுவார் என்றும் தகவல்

முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு

இன்னும் சில மணி நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஜெ. திட்டம்

மீடியாக்களை சந்திக்காவிட்டால், பொதுமக்களிடம் டி.வி. மூலம் உரையாற்ற ஜெ. திட்டம்

குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி

சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு ரத்தானதால் அபராதமும் ரத்தானது

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதமும் ரத்து

சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதமும் ரத்து

மே 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா ?

போயஸ் தோட்டம் வந்தடைந்தார் ஓ.பி.எஸ்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், இளவரசி ஆகிய நான்கு பேரும் விடுதலை

ஜெ. வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக ஹோர்ட் ஹால் 14க்கு வந்தார் நீதிபதி குமாரசாமி

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை

வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகும் - அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா

ஜெயலலிதா வென்றால் கர்நாடக அரசு அப்பீல் செய்யும்- ஆச்சார்யா

ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் அப்பீல் செய்வார் - கர்நாடக ஹைகோர்ட் வளாகத்தில் ஆச்சார்யா தகவல்

நீதிபதி குமாரசாமியின் கோர்ட் ஹால் நிரம்பி வழிகிறது

வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் குவிந்து விட்டனர்

நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு அறை ஹவுஸ் புல் ஆனது

இன்னும் சில நிமிடங்களில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வாசிக்கவுள்ளார்

Jaya's legal team ready to file bail in SC

சென்னை மிகவும் பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடு

3 ஏசி தலைமையில் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில்

வன்முறை நிகழாமல் தடுக்க முன்னேற்பாடுகள்

கோர்ட் ஹாலுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்

சுமார் 500 பத்திரிகையாளர்கள் கோர்ட் ஹாலுக்குள் நெருக்கியடித்தபடி நிற்கின்றனர்

பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் நீதிமன்ற அறை எண் 14-க்குள் அமர்ந்தனர்

அப்பீல் வழக்கில் வென்றால் ஜெயலலிதா உடனடியாக முதல்வராக பொறுப்பேற்க முடியும்- சட்ட நிபுணர்கள்

ஜெ. தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கிறார்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு குவிந்த கட்சி தொண்டர்கள்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு முன்பு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர்

குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் மட்டுமின்றி, திமுக வக்கீல்களுக்கும் கோர்ட் ஹாலுக்குள் அனுமதி

குற்றம்சாட்டப்பட்ட தரப்பு வக்கீல்களை தவிர வேறு யாரையும் கோர்ட் ஹாலுக்குள் அனுமதிக்க முடியாது- போலீஸ் உத்தரவு

சென்னை நகரின் பல இடங்களிலும், ஜெயலலிதாவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ள அதிமுகவினர்

போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு - ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு

ஜெ. வழக்கு தீர்ப்பையொட்டி போயஸ் கார்டனில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

Jaya's legal team ready to file bail in SC

நல்ல தீர்ப்பு வரும், ஜெ விடுதலை ஆவார் என அதிமுகவினர் நம்பிக்கை

நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க இருக்கும் அறை எண் 14 திறக்கப்பட்டது

கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், மணிசங்கர், செந்தில், தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தர்ப்பு வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச்செல்வன் நீதிமன்றம் வருகை தந்தனர்.

ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் உடையில் குவிந்த அதிமுகவினர்.. போலீஸார் எச்சரித்து விரட்டியடித்தனர்

தீர்ப்பு சொல்ல நீதிபதி குமாரசாமி கோர்ட்டுக்கு வருகை - தனது சேம்பருக்கு சென்றார்

11 மணிக்கு தீர்ப்பை வாசிக்க ஆரம்பிப்பார்

ஜெயலலிதா அப்பீல் வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்றம் வந்தார் நீதிபதி குமாரசாமி

கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்

வழக்கறிஞர் உடையில் கர்நாடக ஹைகோர்ட்டில் குவிந்த அதிமுகவினர்

ஹைகோர்ட் வளாகத்தில் இருந்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பையொட்டி கர்நாடக ஹைகோர்ட்டில் அதிமுகவினர் குவிகின்றனர்

அசம்பாவிதகங்களை தவிர்க்க ஹைகோர்ட் வளாகத்தில் ஆயிரம் போலீசார் குவிப்பு

திக்..திக்...ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் சில மணி நேரத்தில் தீர்ப்பு..!!

சல்மான்கான்' பாணி.. ஜெ.வுக்கு தண்டனை உறுதியானால் சுப்ரீம்கோர்ட்டில் உடனே இடைக்கால ஜாமீன் கோர 'டீம்' ரெடி!

அத்தனை சாமிகளிடமும் மனமுருக வேண்டி நிற்கும் அதிமுகவினர்.. காப்பாற்றுவாரா குமாரசாமி?

Jaya's legal team ready to file bail in SC

நீதிபதி குமாரசாமிக்குப் பாதுகாப்பு.. ஹைகோர்ட்டைச் சுற்றி 144... ஜெ. தீர்ப்புக்கு பெங்களூரு தயார்

நிதானம் காக்க வேண்டும்... தொண்டர்களுக்கு ஜெயலலிதா மீண்டும் அறிவுரை

இது இறுதி தீர்ப்பு அல்ல.. இந்த வழக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும்- ஆச்சார்யா

English summary
Jaya's legal team ready to file bail in SC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X