For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. ஜாமீன் மனுவை அவசர வழக்காக கருத முடியாது என்ற நீதிபதி! வரிசைப்படி விசாரித்தார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் 73வது பட்டியலில் இருந்ததால் ஜெயலலிதா ஜாமீன் மனுவை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரிக்க அதிமுக வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி சந்திரசேகரா மறுத்துவிட்டு வரிசைப்படி வழக்கை எடுத்துக்கொண்டார்.

ஜெ,. ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஹைகோர்ட்டில் இந்த மனு 73வதாக பட்டியலிடப்பட்டிருந்தது. எனவே, பட்டியல்படி ஒவ்வொரு வழக்காக விசாரணை நடத்திய பிறகு, ஜெயலலிதா மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மதியத்துக்கு மேல் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Jayalalitha advocates mulling to request the judge to take up their bail plea

முந்தைய வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டால், ஜெயலலிதா மனு மீது நாளை மறுநாள் (நாளை கர்நாடக அரசு விடுமுறை) விசாரணை நடைபெறும் வாய்ப்பிருந்தது. எனவே, அதற்குள்ளாக ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ராம் ஜெத்மலானி தலைமையிலான வக்கீல் குழு முனைப்பு காட்டியது.

இதையடுத்து இன்று கோர்ட் கூடியதும், நாளை வால்மீகி ஜெயந்தியையொட்டி கர்நாடகாவில் அரசு விடுமுறை என்பதால், ஜெயலலிதா மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அவசர வழக்காக இதை எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, வரிசைப்படித்தான் விசாரிப்பேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து 73வது வழக்கமாக ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்தை விட வேகமாக அதாவது மதியத்துக்கு முன்பே விசாரணைக்கு வந்துவிட்டது.

English summary
Jayalalitha advocates mulling to request the judge to take up their bail plea in advance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X