ஜெ. வழக்கில் அரசு உதவி வக்கீல் வாதாட மறுப்பு! பவானிசிங்கை போல சம்பளம் கேட்கிறார்
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி மறுத்துவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கும், உதவி வழக்கறிஞராக முருகேஷ் மரடியும் ஆஜராகிவந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், சம்பளம் குறைவாக இருப்பதால், தன்னால் வாதிட முடியாது என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறி, ராஜினாமா செய்ததாகவும், அதையடுத்து, அவரை சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ராஜினாமாவை பவானி சிங் மறுத்து, விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி, ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, பவானி சிங்கிடம், நேற்று முன்தினம் நேரடியாகக் கூறியுள்ளார். இதனால், நேற்றைய விசாரணையின்போது, மரடி ஆஜராகவில்லை.
இதுகுறித்து பவானி சிங் கூறுகையில் "வழக்கு விசாரணைக்கு, நான் இனி வர மாட்டேன் என்று கூறிவிட்டு, மரடி சென்று விட்டார். இதில் நான் என்ன செய்ய முடியும். அரசு உதவி வழக்கறிஞராக வேறு யாரையாவது நியமனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.
பவானி சிங்கிற்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல தனக்கும் அதிகரிக்க வேண்டும் என்று கூறியே மரடி ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications