ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: 306 சொத்துக்களை பட்டியலிட்ட பவானிசிங்
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் இன்று (வியாழக் கிழமை) விசாரணைக்கு வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 16-வது நாளாக தன்னுடைய இறுதிவாதத்தை இன்றும் தொடர இருக்கிறார்.

மே 9ம் தேதி
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15-வது நாளாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார்.

ஆஜரான வழக்கறிஞர்கள்
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

வாசித்த பவானிசிங்
அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன்.

306 சொத்துக்கள்
இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை.

இன்றும் தொடரும்
இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது'' என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங்.

அவகாசம் முடிந்தது
நீதிபதி டி'குன்ஹா அரசு வழக்கறிஞருக்கு இறுதி வாதம் நிகழ்த்தக் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே பவானி சிங் வழக்கு குறித்த முக்கிய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து இன்றுடன் தன்னுடைய இறுதிவாதத்தை அரசு வழக் கறிஞர் நிறைவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக தரப்பு வாதம்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொது செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், தங்களுடைய தரப்பின் இறுதி வாதத்தை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அன்பழகனின் வழக்கறி ஞர்கள் குமரேசன், சரவணன், ராமசாமி, பாலாஜி சிங், மற்றும் நடேசன் அடங்கிய 5 பேர் குழு அதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
இந்த வழக்கை இறுதிக்கட்டத்திற்கு நகர்த்தியதில் திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் தரப்பினருக்கு முக்கியப் பங்கு இருப்பதால், அவர்களின் இறுதி வாதத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெ தரப்பு வாதம்
வரும் 19-ம் தேதி முதல் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலி தாவின் வழக்கறிஞர் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்க வேண் டும் என நீதிபதி டி'குன்ஹா கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications