For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் சிறப்பு கோர்ட் அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய முயன்ற அதிமுகவினர் மீது தடியடி

By Chakra
Google Oneindia Tamil News

-பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பரப்பன அக்ரஹாரத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்

-பெங்களூரில் சிறப்பு கோர்ட் அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய முயன்ற அதிமுகவினர் மீது தடியடி

-காரில் கோர்ட்டுக்கு வருகிறார் ஜெயலலிதா

Jayalalitha assets case verdict in Bangalore court live

-பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார்

-சென்னையில் வெறிச்சோடிய அதிமுக தலைமையகம்

-பலத்த பாதுகாப்புடன் போலீஸ் கார்கள் அணிவகுக்க காரில் நீதிமன்றம் செல்கிறார் ஜெயலலிதா

-பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்திலிருந்து நேரடியாக நீதிமன்றம் கிளம்பிய ஜெயலலிதா

-தாமதம் ஆனதால் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்லவில்லை

- பலத்த பாதுகாப்புடன் நீதிபதி மைக்கேல் குன்ஹா பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தார்

-எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோர்ட்டுக்கு செல்கிறார் ஜெயலலிதா

-ஜெயலலிதா பயணிப்பதையடுத்து ஒசூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்தை நிறுத்த போலீசார் முடிவு

-சென்னையில் விமான நிலையம் செல்லும் வழியில் கோட்டூர்புரம் வரசக்தி விநாயகர் கோயிலில் ஜெ. வழிபாடு

-காரில் இருந்தபடியே ஜெ., சசிகலா, இளவரசி சாமி கும்பிட்ட பின்னர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்

-அதிமுகவினர் ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசலில் நீதிபதி குன்ஹாவும் சிக்கினார்

-நீதிமன்றம் அருகே உள்ள கடைகள் வலுக்கட்டாயமாக மூட வைக்கப்பட்டுள்ளது

-ஜெ-க்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் ஷீலா பாலகிருஷ்ணன் அடுத்த தமிழக முதல்வர்?

-தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அரசு ஆலோசகராக உள்ளார்

-ஓ.பி.எஸ்., விசாலாட்சி நெடு\ஞ்செழியன், செந்தில் பாலாஜி ஆகியோரில் ஒருவர் முதல்வராகவும் வாய்ப்பு

-பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தரையிறங்கியது ஜெயலலிதாவின் விமானம்

-பெங்களூர் நீதிமன்றம் அருகே உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு

-கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட விட மாட்டோம்- முதல்வர் சித்தராமையா

-ஜெயலலிதாவை வரவேற்று பெங்களூரில் கட்-அவுட்டுகள் ஒட்டியுள்ள அதிமுகவினர்

-அதிமுகவினரின் வருகையால் பெங்களூர்-ஒசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

-சென்னை விமானநிலையத்தில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டனர்

-சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் கர்நாடக போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

-ஜெ. வழக்கு நீதிமன்றத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதால் பிரச்சனை

-ஒசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் அதிமுகவினர் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு

-நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பம்

-ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி

-கோர்ட் வளாகத்தில் சன் டிவி, கலைஞர் டிவி தொலைக்காட்சி நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சம்

-நேரடி ஒளிபரப்பு வாகனங்களை தவிர்த்தன சன் டிவி, கலைஞர் டிவிகள்

-மீனம்பாக்கத்தில் இருந்து பெங்களூர் கிளம்பியது ஜெயலலிதாவின் விமானம்

-அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுப்பு

-கர்நாடக காவல் துறையோடு வாய்த்தகறாரில் ஈடுபட்டதால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்

-நீதிமன்றத்தை சுற்றி செல்போன் ஜாமர்கள் அமைத்த போலீஸ்.. செல்போன்கள் இயங்கவில்லை

-பெங்களூர் நீதிமன்றத்தைச் சுற்றி 3 கி.மீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு

-தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றம் அருகே செல்ல அதிமுகவினருக்கு தடை

-எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு மட்டுமே நீதிமன்றம் அருகே அனுமதி

-தீர்ப்பு வழங்கப்படும் பெங்களூர் நீதிமன்றத்துக்கு முன்பே 1 கிலோ மீட்டர் தொலைவில் அதிமுகவினர் தடுத்து நிறுத்தம்

-சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு- அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிமன்றத்துக்கு வருகை

-தீர்ப்பு அளிக்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் பெங்களூர் புறநகரில் உள்ளது

-ஒசூரில் இருந்து பெங்களூரில் நுழைந்த 20வது கி.மீட்டரில் உள்ளது

-எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ளது இந்த நீதிமன்றம்

-பெங்களூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது

-பஸ்களில் வரும் அதிமுகவினரை பெங்களூர்- ஒசூர் எல்லையில் இறக்கிவிடும் கர்நாடக போலீசார்

-தமிழகம்- கர்நாடக எல்லையில் வாகனங்கள் முழுமையான சோதனைக்குப் பிறகே பெங்களூருக்குள் அனுமதிக்கப்படுகின்றன

-தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்பு. அறிவிக்கப்படாத 144 தடையுத்தரவு

-ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி

-பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் ரத்து

-நிலைமையை கண்காணித்து பேருந்தை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு

-பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தை சுற்றி 3 கி.மீ.க்கு 144 தடை உத்தரவு

-சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் அதிகாரப்பூர்வமற்ற 144 தடை உத்தரவு!

-தமிழகம்- கர்நாடக எல்லையிலும் அதிகாரப்பூர்வமற்ற 144 தடை உத்தரவு

-தமிழக முக்கிய நகரங்களில் அதிகாரப்பூர்வமற்ற 144 தடை உத்தரவு

- பெங்களூர் பழைய விமான நிலையத்தில் இறங்குகிறது ஜெ. விமானம்

- இந்திரா நகர் லீலா பேலஸ் ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்துவிட்டு நீதிமன்றம் கிளம்புவார்

- சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார் ஜெயலலிதா

- ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் பெங்களூரு புறப்பட்டனர்

- சென்னை போயஸ்கார்டனில் இருந்து கார் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார் ஜெ.

English summary
A special court in Bangalore will pronounce its verdict today on Tamil Nadu chief minister J Jayalalithaa’s role in a disproportionate assets case. The case has taken 18 years to reach a verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X