For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: காலையில் இருந்து நடந்தது இது தான்!

By Chakra
Google Oneindia Tamil News

-அடுத்த முதல்வர் யார்.. எம்எல்ஏக்கள் கூடி முடிவு செய்வர்

-தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஜெயலலிதா தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

-சிறையில் அடைக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை

-பரப்பன அக்ரஹாரா பகுதியில் இருந்து கண்ணீருடன் அதிமுகவினர் வெளியேறுகின்றனர்

-ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 100 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்

-அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!

-ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்

-4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை

-ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும்

-ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம்

-சசிகலாவுக்கும் ரூ. 10 கோடி அபராதம்

-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம்

-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 130 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

-10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!

-ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை

-ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!

-பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு

-ரகளையில் ஈடுபட்ட 100 அதிமுகவினர் கர்நாடக போலீசாரால் கைது

-சென்னையில் இருந்து இன்றிரவு ஆம்னி பேருந்துகள் இயங்காது

-சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் வீடு முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

-ஜெ. தீர்ப்பு எதிரொலி... சென்னையில் மாநகர பேருந்துகள் நிறுத்தம்

-பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடல்

-நெல்லை, நாகர்கோவிலில் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம்

-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து

-தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

-அதிமுகவினர் வன்முறை எதிரொலி- தமிழகத்துக்கான பஸ்களை கேரளாவும் ரத்து செய்தது

-ஜெயலலிதா, சசி, இளவரசி, சுதாகரனுக்கான தண்டனை விவரம் சிறிது நேரத்தில் அறிவிப்பு

-சோகத்தில் அதிமுகவினர்

-தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்

-தென் சென்னை மா.செ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல்

-கோபாலபுரம் கருணாநிதி வீடு, சித்தரஞ்சன் சாலை ஸ்டாலின் வீடு, அறிவாலயத்திலும் கல்வீச்சு

-போலீஸ் பாதுகாப்பு இல்லை

-ஜெயலலிதா தீர்ப்பை தொடர்ந்து வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள்

-போலீசார் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர்- பெங்களூர் போலீஸ் கமிஷனர்

-சென்னை நகரில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது

-சாலைகளில் வாகனங்களைநிறுத்தி அதிமுகவினர் ஆர்பாட்டம்

-அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம்

-அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிப்பு... அவசரம் அவசரமாக ஊழியர்கள் புறப்பட்டனர்

-ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்குத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் : தமிழிசை சவுந்திரராஜன்

-மத்திய பாஜக ஆட்சியில் சட்டம் சுதந்திரமாகச் செயல்படுவதை இத்தீர்ப்புக் காட்டுகிறது : தமிழிசை

-தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும் : தமிழிசை

-சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும், வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைத் தேவை : தமிழிசை

-சுப்பிரமணியசாமி வீடு மீது கல்வீச்சு... கல்வீச்சு நடத்தியவர்கள் மீது போலீஸ்தடியடி

-சென்னையில் கடையடைப்பு... அலுவலகங்களும் மூடல்

-ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

-கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டின் வெளியே திமுக தொண்டர்கள் மீது தாக்குதல்

-ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம்

-100 பேர் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்

-ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு- காஞ்சிபுரம் அருகே அரசு பஸ்ஸை தீ வைத்து எரித்த அதிமுகவினர்

-சென்னை சுப்ரமணியசுவாமி வீட்டில் அதிமுகவினர் கல்வீச்சு

-கோவை, மதுரையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கல்வீச்சு

-ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது

-திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

-செங்கோட்டையில் கருணாநிதி உருவபொம்மை எரிப்பு

-ஆலங்குளத்தில் பஸ் மறியல்

-தமிழகம் முழுவதும் போராட்டங்களில் குதித்த அதிமுகவினர்

-எனக்கு உடல் நிலை சரியில்லை.. தண்டனையை குறையுங்கள்- நீதிபதியிடம் ஜெ

-2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது

-சிறை தண்டனை காலம் + 6 வருடத்துக்கு என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை வரும்

-ஓராண்டுக்குக் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை வராது

-சசிகலா, இளவரசி, சுதாகரனும் குற்றவாளிகள் என்று அறிவிப்பு

-ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தது பெங்களூர் போலீஸ்

-ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

-தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது

-ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது

-தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்? விசாலாட்சி நெடுஞ்செழியன்? செந்தில் பாலாஜி?

-18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு

-சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்

--குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்

--குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்

-வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு

-விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்

-ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு

-ஜெ தீர்ப்பு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடைகள் அடைப்பு

-நாமக்கல்லிலும் பள்ளிகள் பாதியிலேயே மூடல்

-தமிழகத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

-ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்

-உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்

-தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

-பெங்களூர்நீதிமன்ற வளாகத்திற்குள் கூடுதலாக 500 போலீசார் விரைந்தனர்

-நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

-3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றுள்ளன.

-நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் பேசிவிட்டு சென்றார் ஜெயலலிதா

- ஜெயில் பார் ஜெயலலிதா: ட்விட்டரில் சொல்கிறார் சு.சாமி

--அதிமுக தலைமையகம் வெறிச்சோடியது!

-பெங்களுர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

-தமிழகம் முழுவதும் தனியாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உத்தரவு

-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தெரியவில்லை

-ஜெ வழக்கு தீர்ப்பு மதியம் 2.30 மணிக்கு - நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவிப்பு

-நீதிமன்ற வளாகத்தில் காத்து இருக்கிறார் ஜெ.

ஓசூரில் சுப்பிரமணிய சுவாமி, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் கொடும்பாவிகள் எரிப்பு

-ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு தள்ளி வைப்பு?

-சுப்ரமணியசுவாமி படத்திற்கு செருப்படி அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

-கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை

-பெங்களூர் கோர்ட் முன்பு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி மீது தடியடி

-நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்

-காரில் அமர்ந்து இருவரும் 20 நிமிடங்கள் பேச்சு

-கருணாநிதி வீடு இருக்கும் சென்னை கோபாலபுரத்தில் மின்சாரம் துண்டிப்பு

-ஜெ, சசி, இளவரசி. சுதாகரன் மீதான முழு குற்றச்சாட்டுகளை தமிழ், ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்

-அதனால் தான் தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக தாமதம் ஆவதாகவும் தகவல்

-சென்னையில் அதிமுக அலுவலகம் முன்பு கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு

-ஜெ. வழக்கில் தீர்ப்பு கூறும் நேரத்தில் தமிழகத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றாக "கட்"

-கோர்ட்டுக்கு வெளியே வந்து காரில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு சென்றார் ஜெ.- தகவல்கள்

-ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது

-முழு தீர்ப்பும் தமிழ், ஆங்கிலத்தில் படிக்கப்படுவதால் தீர்ப்பு வெளியாவதில் தாமதமாகவதாகவும் தகவல்

-தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

-தமிழகம் வரும் அனைத்து கர்நாடக பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

-தமிழக பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன.

-தமிழகம் முழுக்க மின்தடை மாலை வரை நீடிக்கும் என தகவல்.

-தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுக்கள்,இனிப்புகளோடு ,கடும் டென்சனோடும் காத்திருப்பு.

-தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே குவிப்பு

-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: கன்னட சேனல்கள்

-கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் செய்தி ஒளிபரப்பு

-சட்டப் பிரிவு 13 (1) இ படி ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாக கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பு

-தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட சேனல்களில் விவாதம் ஆரம்பம்

-வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

-மதியம் 1 மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியே வரும்

-ஜெ. வழக்கு தீர்ப்பு அறிவாலயம் வாசலில் திமுகவினர் வெடியோடு காத்திருப்பு

-பெங்களூர் நீதிமன்றத்திற்கு வெளியே டென்ஷனில் அங்கும் இங்குமாக நடக்கும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி

-தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை

-ஜெ. வழக்கு தீர்ப்பு செய்தியை இருட்டடிக்க திட்டமா?

-நீதிமன்றத்திலேயே ஜெ, சசி, இளவரசி, சுதகரன் காத்திருப்பு

-கவலையான முகத்துடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த 2 அதிமுக வழக்கறிஞர்கள்

-ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு மதியம் 1 மணிக்கு தள்ளிப்போகிறது

-ஜெ. வழக்கறிஞர் தகவல்

-தீர்ப்புக்கு முன்பே லட்டு தர ஆரம்பித்த அதிமுகவினர்

-ஜெ. வழக்கு தீர்ப்பு வெளியானவுடன் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் கருணாநிதி, ஸ்டாலின், வைகோ

-ஜெ. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார் நீதிபதி குன்ஹா

-தீர்ப்பு விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவிக்க இருக்கிறார் அரசு வழக்கறிஞர் பவானிசிங்

-நீதிமன்றம் அருகே கலாட்டாவில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பெங்களூர் போலீசார் மீண்டும் தடியடி

-ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இனிப்புகளுடன் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள்

-ஜெயலலிதாவை வாழ்த்தி வாழ்த்து கோஷம் எழுப்பியபடி தீர்ப்புக்காக காத்திருப்பு

-பெங்களூருக்குள் அனுமதிக்கப்படாததால் ஒசூரில் அதிமுகவினர் போராட்டம்

-தமிழக- கர்நாடகா எல்லை கிருஷ்ணகிரியில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை

-திக்.. திக்.. நிமிடங்கள் ஆரம்பம்

-நீதிமன்ற ஹாலுக்குள் ஜெ, சசி, இளவரசி, சுதாகரன், வழக்கறிஞர்கள்

-அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் உள்ளே

-எந்த நேரத்திலும் தீர்ப்பை அறிவிப்பார் நீதிபதி மைக்கேல் டி- குன்ஹா

-கோர்ட்டுக்குள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்

-ஜெ.வின் சென்னை போயஸ் கார்டன், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லங்களில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்

-18 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு

-ராகு காலம் முடிந்த நல்ல நேரத்தில் கோர்ட்டுக்குள் வந்த ஜெயலலிதா

-நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது ஜெயலலிதாவின் கார் அணிவகுப்பு

-நீதிமன்றத்துக்குள் நுழைய விடாமல் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியநாதன் தடுத்து நிறுத்தம்

-பெரும் வாக்குவாதத்துக்கு பின் ஓ.பி, நத்தம் விஸ்வநாதத்துக்கு அனுமதி

-நீதிமன்ற வளாகத்தை நெருங்கினார் ஜெயலலிதா

-அம்மா வாழ்க கோஷம், விசில் சப்தத்துடன் கொடிகளை அசைத்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர்

-இரட்டை விரலை காட்டியவாறு சென்றார் ஜெயலலிதா

-10.30 மணிக்கு மேல் தான் நல்ல நேரம்.. அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நுழையும் ஜெ.

-18 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு

-நீதிமன்ற வளாகத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது ஜெயலலிதாவின் வாகனம்

English summary
A special court in Bangalore will pronounce its verdict today on Tamil Nadu chief minister J Jayalalithaa’s role in a disproportionate assets case. The case has taken 18 years to reach a verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X