For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வாரமாக ஜெ.வுக்கு காய்ச்சல்.. ஏன் கண்டுகொள்ளவில்லை?

சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

Jayalalitha had suffering from fever for a week before she was admitted in Apollo

இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை சிகிச்சை அளித்தனர். அதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையை தமிழக அரசிடம் நேற்று அளித்தது. அதில், அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவானது 400-ஆக இருந்தது.

அவருக்கு தவறான மருந்துகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் தாக்கியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹை-சுகர் மற்றும் கடுமையான காய்ச்சல் இருந்த நிலையிலும் ஏன் மருத்துவமனையில் ஜெயலலிதா முதலிலேயே அட்மிட் செய்யப்படவில்லை என்ற சந்தேகமும் இந்த அறிக்கையின் மூலம் எழுந்துள்ளது.

English summary
Former Chief Minister Jayalalitha had suffered from fever for 1 week when she was admitted in Apollo Hospital, says AIIMS medical report which was released by TN govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X