சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய கார்.. போலீசார் தீவிர விசாரணை
ஜெயலலிதா, அந்த காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த காரை சிறிது காலத்திற்கு பின் மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
சித்தூர்: சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதா பயன்படுத்திய பழைய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டலம், பகுதியில் உள்ளது ஆரோம் கிராமம். அக்கிராமத்தில் தமிழக பதிவு எண் கொண்ட கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்து.

இதுகுறித்து நேற்று முன்தினம் சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், காரை திறந்து உள்ளே இருந்த ஆவணங்களை சரி பார்த்தனர்.
அந்த காரின் பதிவு எண்ணான, டி.என்.07 வி-1948 என்பதை வைத்து விசாரணை நடத்தியபோது, அது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தத கார் என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் கடைசிவரை அந்த காரை பயன்படுத்தவில்லை. ஜெயலலிதா, அந்த காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த காரை சிறிது காலத்திற்கு பின் மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். கார் பதிவு எண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் அம்பலமானது.
இருப்பினும், காரில் கிடைத்த ஆவணங்கள் உண்மையானது தானா? என்பது குறித்து கே.வி.பி.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications