ஜெ வழக்கு தீர்ப்பு: 15 மாவட்ட தமிழக எஸ்.பிக்களுடன் பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் ஆலோசனை!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை கேட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வரும் நாளன்று நகரில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

15 மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்குள் வரும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்ய எல்லையோரத்திலுள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 15 மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களை தொடர்பு கொண்டு, அங்கிருந்து கிளம்பும் வாகனங்களை தீவிர தணிக்கை நடத்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

எல்லையில் வாகனத்தை நிறுத்த திட்டம்
தமிழக போலீசாரும், கர்நாடக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தேவையேற்பட்டால் பெங்களூர் எல்லையிலேயே தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில், சிசிடிவி ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு தீர்ப்பு நாளில் கோர்ட்டை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தேவையேற்பட்டால் அதிகபட்சமாக 5 ஆயிரம் போலீசார்வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

5 கம்பெனி அதிரடி படை குவிப்பு
போலீசார் மட்டுமின்றி அதிரடி போலீஸ் படையின் (RPF) 5 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். கலவரத்தை ஒடுக்கும் வஜ்ரா வகை வாகனங்கள் கோர்ட் வளாகத்தை சுற்றி நிறுத்தப்படும். இவ்வாறு கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார். இதனிடையே, தீர்ப்பு நாளில் பெங்களூரில் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு?
தீர்ப்பு வெளியாகும், சனிக்கிழமை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில், மாலை மற்றும் இரவில் இரு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் பற்றாக்குறை இருப்பதால், ஜெயலலிதா தீர்ப்பு தேதியை தள்ளி வைக்குமாறு எம்.என்.ரெட்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

சவாலை சந்திக்க தயார்!
இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டதற்கு, அதுபோன்ற எந்த ஒரு கோரிக்கையும், காவல்துறை சார்பில் கோர்ட்டில் முன் வைக்கவில்லை, எந்த சவாலையும் பெங்களூர் போலீசார் சமாளிப்பார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே தமிழக முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கர்நாடக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர்களை நேரில் சந்தித்து போலீஸ் கமிஷனர் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications