பொதுவாழ்வில் ஊழல் செய்ததால்தான் ஜெ.மீது வழக்கு.. வருமான வரிக்காக அல்ல.. சுப்ரீம்கோர்ட்டில் தவே வாதம்
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு என்பது வருமான வரி செலுத்தாத விவகாரம் அல்ல; பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதால் தொடரப்பட்ட வழக்காகத்தான் அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் முன்னிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 2-வது நாளாக தமது இறுதிவாதத்தை முன்வைத்தார்.

தம்முடைய இறுதிவாதத்தில் துஷ்யந்த் தவே கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் எப்படி வருமானம் வந்தது என பதில் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்தது. உடனே தொண்டர்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றதாகக் கூறி தப்ப முயற்சித்தது ஜெயலலிதா தரப்பு.
கர்நாடகா உயர்நீதிமன்றமோ, ஜெயலலிதா பெற்ற கடன்களைக் கூட வருமானமாக மதிப்பீடு செய்திருக்கிறது. 1960ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமானது பயணப்படியை வருமானமாக கருதக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது. அது இதற்கும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் பொதுவாக தங்களுக்கு பரிசுப் பொருட்கள் மூலம் சொத்து வந்ததாக கூறி அடைக்கலம் தேடுகின்றனர். இந்த பரிசுப் பொருட்கள் மூலமாக வரும் சொத்துகளையும் சட்டப்பூர்வமான வருமானமாக கருதினால் அவர்களால் தப்ப முடியாது.
ஜெயலலிதா தரப்பைப் பொறுத்தவரை கடனைத் தவிர வேறு எந்த ஒரு சட்டப்பூர்வமான வருமானம் மூலம் இந்த சொத்துகள் வாங்கப்பட்டதாக நிரூபிக்கவில்லை. மேலும் வருமான வரி விதிகளை சுட்டிக்காட்டியிருக்கிறது ஜெயலலிதா தரப்பு. ஆனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டோருக்கு வருமான வரி விதிகள் பொருந்தாது.
பொதுவாக எந்த ஒரு அரசியல் கட்சியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர மறுக்கின்றன. ஜெயலலிதா மீதான வழக்கு வருமான வரி வழக்கு அல்ல. பொதுவாழ்வில் உள்ள ஒருவர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்காகத்தான் பார்க்க வேண்டும்.
ஊழலை ஒழிப்பதற்காக வலிமையான செயல்முறை எதுவும் நம் நாட்டில் இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தவே வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதலமைச்சர் போன்ற பதவியில் இருப்போருக்கு தனிப்பட்ட நடத்தை விதிகள் எதுவும் உண்டா? அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டடனர்.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications