ஜெயலலிதா உடல்நிலை பற்றி பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் வெங்கையா நாயுடு
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சென்னையிலேயே தங்கியுள்ளார்.
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தார்
அப்பல்லோவில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல அரசியல் தலைவர்கள் இன்று அப்பல்லோவிற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
இன்று அதிகாலையில் முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர் அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றார்.
Feeling bad to know abt da critical condition of TN CM Selvi Jayalalitha. Praying fr her speedy recovery and quick response 2 the treatment.
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) December 4, 2016
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசகர் ராவ்விடம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, முதல்வர் உடல் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று மாலை 6 மணிக்கு வந்தார். சுமார் 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள், அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு வெங்கையா நாயுடு சென்னையிலேயே தங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications