டெல்லி - சென்னை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளி.. பயணிகள் பீதி
டெல்லி: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் விமானம் நாக்பூருக்குத் திருப்பி விடப்பட்டு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
இன்று மாலை ஜெட் ஏர்வேஸின் 9W832 என்னும் விமானம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் 115 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த மர்ம மனிதர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டு அங்கு விமானம் முழுவதும் முழுமையாக சோதிக்கப்பட்டது என்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய துணை ஆணையர் தினேஷ் குமார் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது வெறும் புரளிதான் என்றும், எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமான இடத்திற்கு இறக்கி தங்க வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். விமானம் தாமதமாக புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications