கருப்புப் பண விவகாரத்தில் ப. சிதம்பரம் பாதையை பின்பற்றுகிறது மோடி அரசு: ராம்ஜெத்மலானி சாடல்!
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் பாதையைத்தான் தற்போதைய மோடி அரசும் பின்பற்றுகிறது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானாலும் கருப்புப் பண விவகாரத்தில் நேர்மையாக, முழு ஈடுபட்டுடன் செயல்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் விசாரணையைத் தொடங்கி கைது செய்ய வேண்டும்.

கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் மீது விசாரணையை உடனே தொடங்க வேண்டும். வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் பெயரை ஜெர்மனி லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளது. ஊடகங்களிலும் ஜெர்மனி நிதி அமைச்சர் வெளிப்படையாகவே, கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பட்டியலை எந்த ஒரு நிபந்தனையுமின்றி வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று அறிவித்தார்.
ஆனால் அந்தப் பட்டியலைப் பெற நாம் எதுவுமே செய்யவில்லை. இந்த கருப்புப் பணம் தொடர்பான விசாரணையை முழுமையாக சீர்குலைத்தவர் ப. சிதம்பரம்தான். அவரது வழியைத்தான் தற்போதைய நிதி அமைச்சர் ஜேட்லியும் பின்பற்றுகிறார். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காரணமே மத்திய நிதி அமைச்சர் ஜேட்லிதான்.
பிரதமர் மோடி நினைத்தால் நிச்சயமாக கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியும். கருப்புப் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடுகிற நான் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். அப்படியானால் பாஜகவில் எப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications