ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணிக்கு உண்மையிலேயே பாஜக சவாலாக உள்ளதா.. ஜார்க்கண்டில நிலவரம் என்ன?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கின்ற நிலையில், பாஜக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அங்கு ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த தேர்தலை போல இல்லாமல் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணிக்கு சவால் அளிக்கும் விதமாக பாஜக புது வியூகங்களை வகுத்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவை பொறுத்தவரை பழங்குடியினரின் வாக்குகளை பெற தடுமாறி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜே எம் எம் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் படு மோசமான தோல்வியை பழங்குடியின பகுதிகளில் அடைந்தது. பழங்குடியின மக்களுடன் மிக நெருக்கமான ஒரு கட்சியாக ஜேஎம்எம் உள்ளது.

ஆனால் இந்த முறை சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்திருப்பதால் அக்கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஜார்கண்டில் பாஜக இரண்டு விதமான வியூகங்களை வகுத்துள்ளதாக தெரிகிறது. சம்பாய் சோரன் போல பழங்குடியினர் மத்தியில் பிரபலமாக செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது ஒன்று.. மற்றொன்று புதிய கட்சிகளை கூட்டணியில் இனைத்து வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்பது.
இவ்வாறாகன இரண்டு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது. அந்த வகையில் தான் பாஜக மஹ்டோவின் ஜார்க்கண்ட் ஸ்டூடண்ட் யூனியன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. சம்பாய் சோரன் கட்சியில் இணைந்தது நிலையில், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்த தீவிர வியூகம் வகுத்து வருவது. இதன் காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, கடும் சவாலை ஆளும் ஜே எம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கும் என தெரிகிறது.
யார் இந்த சம்பாய் சோரன்?: ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், தற்காலிக முதல்வராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் அதிருப்பதியடைந்த சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் சம்பாய் சோரன் இணைந்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்











Click it and Unblock the Notifications