கொடூரம்! தாய் கண் முன்னே மைனர் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த 5 பேர்! வெலவெலத்து போன கிராமம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ள கூட்டுப் பலாத்கார சம்பவம் அந்த மாநிலத்தையே அதிரச் செய்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பாலியல் குற்றங்கள் சமீப காலமாகப் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

மைனர் சிறார்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகிறது. அப்படியொரு அதிர வைக்கும் சம்பவம் தான் ஜார்கண்ட்டில் அரங்கேறி உள்ளது.

 ஜார்கண்ட்

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் அந்த சிறுமியின் தாயார் முன்னிலையிலேயே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் இணைந்து அந்த சிறுமியைக் கொடூரமாகப் பலாத்காரம் செய்து உள்ளனர்.

 இருவர் கைது

இருவர் கைது

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விசாரிக்க தியோகர் காவல்துறையால் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது


பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். அந்த சிறுமி தனது தாயாருடன் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது மதுபூர் அருகே இந்த கொடூரம் நடந்து உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 தாய் கண் முன்னால்

தாய் கண் முன்னால்

சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, மதுபூர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது, அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் அவர்களை வழி மறித்து உள்ளனர். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று உள்ளனர். அப்போது அவர்களைத் தடுக்க சிறுமியின் தாயார் முயன்று உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாயாரைக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

 கைது

கைது

அதன் பின்னர் அதே இடத்தில் தாயார் கண் முன்னாலேயே சிறுமியைக் கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்து உள்ளனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் 5இல் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+