ஜார்க்கண்ட் 2 கட்ட சட்டசபை தேர்தல் தேதியை பாஜகவுக்கு முன்பே தெரிவித்ததா இந்திய தேர்தல் ஆணையம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தேதியை நேற்றே பாஜகவினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு முன்கூட்டியே அதாவது நேற்றே தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2 அல்லது 3 தொகுதிகள் தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சிகள் இணைவதும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு மிரட்டுவதும் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. கடந்த சில தேர்தல்களாக பாஜக மட்டுமே அதிகமான இடங்களில் போட்டியிட்டு வந்தது. தற்போதைய நிலையில் பாஜகவால் 50 தொகுதிகளிலாவது போட்டியிட முடியுமா? என்ற நிலைமைக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சற்று முன்னர்தான் டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும். ஆனால் இந்த தேர்தல் தேதிகளை முன்கூட்டியே பாஜகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் மனோஜ் பாண்டே, இந்திய தேர்தல் ஆணையம் நேற்றே பாஜக தலைவர்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை தெரிவித்துவிட்டது. பாஜகவுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டால் தேர்தல் எப்படி நேர்மையாக நடக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிதி உதவியை ரூ.2,500 ஆக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகப்படுத்தப்பட்ட நிதி உதவி வரும் டிசம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications