காங்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி வெற்றி.. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜகவுக்கு பேரிடி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியை இழக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும், ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட்
அதாவது காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணியோ அறுதி பெரும்பான்மையை கடந்து 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்த மாநிலத்தின் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகிறார்.

ஆட்சியை இழந்த பாஜக
மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக்கட்சியை காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஓரங்கட்டிவிட்டு ஆட்சி அமைக்கிறது. இதனால் மகாராஷ்டிரத்தை போல் ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியை இழந்துவிட்டது.

சட்டசபை தேர்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்ததால் இங்கு முதல் முறையாக முத்திரை பதித்தது என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. மாநிலத்தில் முதன்முதலில் 2000-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மதுகோடா
அன்றிருந்து கடந்த தேர்தல் வரை ஜேஎம்எம், பாஜக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது. ஒரு முறை மட்டும் 2005-ஆம் ஆண்டு பாஜகவின் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் ஆட்சி கவிழ்ந்தவுடன் 2006 முதல் ஒரு ஆண்டுக்கு சுயேச்சையான மதுகோடா முதல்வராக பதவி வகித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications