ஸ்பெக்ட்ரம் இறுதி அறிக்கை- ஜேபிசி கூட்டத்தில் வாக்கெடுப்புக்குப் பின் ஏற்பு!பிரதமருக்கு 'க்ளீன்சிட்'
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இறுதி அறிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இறுதி அறிக்கையில் பிரதமருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்பு ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவானது ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய புதிய ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இதனால் இன்றைய கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கு தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் சாக்கோ திட்டமிட்டபடி இன்று கூட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் புதிய ஆவணங்களை பரிசீலிக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று ஜேபிசி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இறுதி வரைவு அறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இறுதி அறிக்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த இறுதி அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எந்த தொடர்பும் இல்லை என்று 'நிம்மதி' கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications