ஓபிஎஸ் ஹாப்பி.. பார்த்ததும் கிட்ட வந்த நட்டா! பக்கத்துல யாரு பார்த்தீங்களா? அந்த ரியாக்சன் இருக்கே

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடந்த 1 மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில் பாஜக இந்த இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

2017ல் இங்கு 99 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, இந்த முறை 156 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றுள்ளது.

முதல்வர்

முதல்வர்

இந்த நிலையில் குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரை சந்தித்தார். அதேபோல் வழியனுப்பவும் காத்திருந்து நின்றார். பின்னர் மறுநாளே அமித் ஷாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் சென்னை வந்தார். அந்த அளவிற்கு பாஜக தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நெருக்கமாக இருந்து வருகிறார்.

சப்போர்ட் யாருக்கு?

சப்போர்ட் யாருக்கு?

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. கட்சியில் இரட்டை தலைமையா, ஒற்றை தலைமையா என்ற மோதல் உள்ளது. இதில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக முக்கிய முடிவு எடுக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவின் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் முனைப்பாக இருக்கிறார்கள். இதையடுத்துதான் இன்று குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று இருந்தார். பாஜக சார்பாக இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவே ஓ பன்னீர்செல்வம் விமானம் மூலம் குஜராத் சென்றார்.

அழைப்பு

அழைப்பு


இன்று குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மேடையில் இருந்துவிட்டு அதன்பின் கீழே இருந்த நிர்வாகிகளுக்கு வணக்கம் மட்டும் வைத்துவிட்டு சென்றனர். மற்றபடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மட்டும் கீழே இருந்த விருந்தினர்களை சந்தித்து பேசினார்.

 ஓபிஎஸ் நட்டா

ஓபிஎஸ் நட்டா

இதில் ஓ பன்னீர்செல்வம் - நட்டா இருவரும் சந்தித்து 2-3 நிமிடங்கள் பேசிக்கொண்டனர். ஓ பன்னீர்செல்வத்தின் உடல் நலம் குறித்து நட்டா இதில் கேட்டறிந்தார். கையை குலுக்கி ஓ பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார். அப்போது எம்பி ஓ பி ரவீந்திரநாத் உடன் இருந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை ஓபிஆர் சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பின் ஓபிஆரை சந்தித்து ஜெ நட்டா நலம் விசாரித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லவில்லை. அவருக்கும் இதற்காக அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எடப்படியோ.. நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட சில அப்பாயின்மென்டுகள் காரணமாக குஜராத் வர முடியாது என்று கூறி பூபேந்திர படேலுக்கு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பி உள்ளார். இரண்டு தலைவர்களும் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் இருவரையும் பாஜக அழைத்ததாக கூறப்படுகிறது. இதை விரும்பாத நிலையில் எடப்பாடி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+