3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நடிகை ஜூஹி சாவ்லாவின் சகோதரர் பாபி மரணம்

Subscribe to Oneindia Tamil

juhi chawla
மும்பை: மூன்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோமாவில் இருந்த நடிகை ஜூஹி சாவ்லாவின் சகோதரர் பாபி இன்று மரணமடைந்தார்.

பிரபல நடிகையான ஜூஹி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா. இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு ஓட்டல் ஒன்ரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பாபி தொடர்ந்து கோமா நிலையிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த பாபி, இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார்.

சமீபத்தில் வெளியான ‘குலாப் கேங்' என்ற படத்தில் மாதுரி தீட்சித்திற்கு எதிராக நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜூஹி நடித்திருந்தார். அந்த படம் வெளிவந்து சில நாட்களை கடந்துள்ளது. இது குறித்து ஜூஹி சாவ்லா டுவிட்டர் வலை தளத்தில், மிக சரியான திரைக்கதை இது. எனது சகோதரர் எப்படி நடந்து கொண்டார் என பாருங்கள். எனது வாழ்நாளில் மிக பெரிய பரிசினை எனக்கு அளித்துள்ளார். படத்தின் வெளியீட்டை அவர் பார்த்தார். அதன் பின்... என சாவ்லா எழுதியுள்ளார்,

பாபியின் மறைவிற்கு திரைக்கதை எழுத்தாளர் ஓம்பார் குரேஷி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘பாபி எப்பொழுதும் சிரித்தபடி இருப்பார். அவரை நீங்கள் இழந்ததை உணர்வீர்கள். ஜூஹி மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஷாரூக் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘நம்மை விட்டு நீங்கியவர்களின் நினைவுகள் நமக்கு பொக்கிஷம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

மாதுரி தீட்ஷித் மற்றும் சில திரையுலகப் பிரபலங்களும் பாபி மரணத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளன.

தனது சகோதரர் பாபியை ஜூஹி மிகவும் நேசித்தார் என்பது அவரது முந்தைய பேட்டிகளைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். மறைந்த பாபி ஷாரூக்கின் ரெட் சில்லி எண்டர்டெயிண்ட்மெண்டில் நிர்வாக அதிகாரியாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+