குடிபோதையில் விவாதம்: பவர் ஸ்டார் ரசிகரை குத்திக் கொன்ற ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்
கோலார்: கர்நாடகாவில் நடிகர் பவன் கல்யாணின் ரசிகர் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி உறுப்பினர் வினோத் குமார்(24) தனது நண்பர்கள் 4 பேருடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வினோத் குமார் மேடையில் பேசியது எதிர்தரப்பை கோப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அடுத்து அதில் கலந்து கொண்டவர்கள் நரசபுராவில் உள்ள பார் ஒன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது வினோத் குமாருக்கும், ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகரான அக்ஷய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அக்ஷய் வினோதை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வினோத் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அக்ஷயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பவன் கல்யாண் வினோதின் வீ்ட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications