கையோடு லன்ச்சையும் கொண்டு வந்து மாலை ஐந்தே முக்கால் மணி வரை காத்திருந்த குன்ஹா!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் உத்தரவு எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்காக மதிய உணவையும் கொண்டு வந்து, நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா காத்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு கடைசி நேரம் வரை வந்து சேராமல் போனதால் அவர் கிளம்பிச் சென்றுள்ளார். இத்தனைக்கும் மாலை 5 மணி வரைதான் கோர்ட் நேரமாகும். ஆனால் ஜெயலலிதாவுக்காக கூடுதலாக முக்கால் மணி நேரம் குன்ஹா காத்திருந்தார். இது மிகவும் அரிய நிகழ்வு என்று கோர்ட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

அதிமுக வக்கீல்களும் கூட, அடடா நீதிபதியே காத்திருக்கிறாரே என்ற ஆச்சரியத்துடனும், படபடப்புடனும் உத்தரவை எதிர்நோக்கியிருந்தனர்.
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவு வருவது போலத் தெரியாததால் குன்ஹா கிளம்பிச் சென்று விட்டார். இதையடுத்தே ஜெயலலிதா நேற்று விடுதலையாக முடியாது என்பது உறுதியானது.
நேற்று முற்பகல் வாக்கில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா எப்போது விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. நடைமுறைப்படி முதலில் உச்சநீதிமன்ற உத்தரவு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். தனி நீதிமன்றம்தான் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிடும். அந்த உத்தரவை கொண்டு போய் சிறையில் கொடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறை நிர்வாகம் விடுதலை செய்து வெளியே அனுப்பும்.
நேற்று உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அது பெங்களூர் கோர்ட்டுக்கு வர மிகவும் தாமதமானது. அதேசமயம், பெங்களூரில் நான்கு பேருக்கும் தலா 2 பேர் வீதம் 8 பேர் பிணை உத்தரவாதம் வழங்க தயாராக காத்திருந்தனர். மேலும் அனைத்து நடைமுறைகளையும் அதிமுக வக்கீல்கள் செய்து வைத்திருந்தனர். மேலும் நீதிபதி குன்ஹாவும் கூட காத்திருந்தார்.
தனி நீதிமன்றத்தின் பணி நேரமானது முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மற்றும் மதியம் 3 மணி முதல் 5 மணி ஆகும். ஆனால் குன்ஹா காலை 10 மணிக்கே வந்து விட்டார். கூடவே மதிய உணவையும் கூட அவர் எடுத்து வந்து விட்டார். மேலும் மாலை 5 மணியைத் தாண்டி ஐந்தே முக்கால் மணி வரை அவர் காத்திருந்தார்.
எல்லாம் ஜெயலலிதாவின் ஜாமீன் உத்தரவு எப்போது வேண்டுமானாலும் வரலாம், தன்னால் விடுதலையாவது தாமதமாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால் நீண்ட நேரமாகியும் உத்தரவு வராததால் நீதிபதி குன்ஹா கிளம்பிப் போய் விட்டார்.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications