உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட்.. ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு
உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன். அவருக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கை யாக நீதிபதி கர்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும் என்று தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த உத்தரவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் நீதிபதி கர்ணன் கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்த உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications