தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்...ஜெ.வுக்கு கட்ஜு திறந்த மடல்
டெல்லி : தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், குடியரசு தலைவரிடம் இது குறித்து பேச வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு திறந்த மடல் எழுதியுள்ளார்.
இல்லையெனில் ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மார்கண்டேய கட்ஜு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இப்போது தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது முழுக்க முழுக்க தமிழக முதல்வரின் முடிவில் தான் உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார் கட்ஜு .
இனியும் தமிழக முதல்வர் தமிழர்களை ஏமாற்றாமல் தனக்கிருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழை வழக்காடு மொழியாக்க ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் முதல்வர் பதிவை உடனே ஜெயலலிதா துறக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கட்ஜு தெரிவித்துள்ளார்.
இதே மார்கண்டேய கட்ஜு தான் ஒருகாலத்தில் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று முகநூலில் செய்தி பகிர்ந்து தமிழர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தமிழர்களின் பலமான போராட்டங்களையும் எதிர்ப்பையும் உணர்ந்த கட்ஜு இப்போது தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வருக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications