பேட் செய்த ஜோதிர் ஆதித்யா..பந்தை பிடிக்க போய் அடிபட்ட பாஜக நிர்வாகி..மைதான திறப்பு விழாவில் சலசலப்பு
கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்துவிட்டு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேட்டிங் செய்தபோது அவர் அடித்த பந்து பாஜக நிர்வாகியின் நெற்றியில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது.
சிம்லா: கிரிக்கெட் மைதானத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா திறந்து வைத்தார். அப்போது பாஜக நிர்வாகிகளுடன் அவர் கிரிக்கெட் விளையாடினார். அவர் பேட்டிங் செய்த போது பந்தானது பாஜக நிர்வாகியின் நெற்றியை பதம் பார்த்தது. இதில் ரத்தம் கொட்டியதால் போட்டி நிறுத்தப்பட்டு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் இடவுரா பகுதியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் மைதானத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா திறந்து வைத்தார். பின்னர் கிரிக்கெட் மைதானத்தில் அமைச்சர்கள் கிரிக்கெட்டும் விளையாடினர்.

கிரிக்கெட் ஆடிய அமைச்சர்
மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேட் செய்ய பாஜகவினர் பந்து வீசினர். வீசப்பட்ட பந்துகளை ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினர். அப்போது ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை சுற்றி பாஜக நிர்வாகிகள் பலரும் நின்று கொண்டிருந்தனர். பந்துகளை ஆஃப் சைடிலும் லெக் சைடிலும் அடித்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஜாலியாக விளையாடிக்கொன்டு இருந்தார்.

நெற்றியை பதம் பார்த்த 'பந்து'
அப்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியா அடித்த ஒரு பந்தை பிடிக்க அங்கு நின்று கொண்டிருந்த பாஜக நிர்வாகி விகஸ் மிஸ்ரா முயற்சி செய்தார். ஆனால், அந்த பந்தை அவரது கைகளில் சிக்காமல் நேரடியாக சென்று நெற்றியை பதம் பார்த்தது. இதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. விகாஸ் மிஸ்ரா காயம் அடைந்ததை பார்த்து பதறிப்போன ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஓடிச்சென்று பார்த்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
காயம் அடைந்த விகாஸ் மிஸ்ரா உடனடியாக அருகில் இருந்த சஞ்சய் காந்தி மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் ராஜேந்திர சுக்லா, ரேவா தொகுதி எம்.பி ஜனார்தன் மிஸ்ரா உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த பிறகு நடைபெற்ற பிரண்ட்லியான கிரிக்கெட் போட்டியின் போது மத்த்திய அமைச்சர் அடித்த பந்தில் பாஜக நிர்வாகி காயம் அடைந்தது பற்றி அங்குள்ள பாஜக நிர்வாகிகள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

ரூ.240 கோடி மதிப்பில்
முன்னதாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா ரேவா மாவட்டத்தில் புதியதாக அமையவிருக்கும் விமனா நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார். ரேவா மாவட்டத்தில் அமைய இருக்கும் இந்த விமானம் நிலையம் ரூ.240 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விந்தையா எக்ஸ்பிரஸ் வே சாலை அமைப்பது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த சாலை போபாலில் இருந்து சிங்ராலி வரை அமைகிறது.












Click it and Unblock the Notifications