பெண் டாக்டருடன் கள்ளத்தொடர்பு, போதை வஸ்து, சினிமா மீது வெறுப்பு: பரபரக்கும் கலாபவன் மணி வழக்கு
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணிக்கு கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் இருந்தது, பெண் மருத்துவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் தேதி மரணம் அடைந்தார். அவர் கடைசியாக அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

கஞ்சா
மணியின் உடற்கூறுகளை ஆய்வு செய்ததில் அதில் கஞ்சா மற்றும் பிற போதை வஸ்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்று மணி போதை பொருட்கள் எடுத்திருக்க வேண்டும் இல்லை வலி நிவாரணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கள்ளத்தொடர்பு
மணிக்கும் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்பால் மணி நிம்மியை விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரின் உறவினர்கள் இருந்தார்களாம்.

மன அழுத்தம்
மணிக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது அவருக்கு தெரிய வந்த பிறகு அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்களும், உதவியாளர்கள் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த உதவியாளர்கள் மூன்று பேரும் தான் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மது அருந்திய இடத்தை சுத்தம் செய்தனர். ஆனால் அவர்கள் தடயங்களை அழித்துவிட்டதாக மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சினிமா வேண்டாம்
மணி மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்ததாகவும், நடிப்பு மீது வெறுப்பு ஏற்பட்டு சினிமாவை விட்டு விலக அவர் திட்டமிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கு கல்லீரல் பிரச்சனை எதுவும் இருந்ததாக தனக்கு தெரியாது என்று நிம்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications