17 நாட்களாகத் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்.. கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆதரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 17 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை இன்று திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டத்தை வருகின்றனர். அவர்களை திமுக எம்பி கனிமொழி இன்று நேரில் சந்தித்தார்.
விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
ஏற்கனவே, முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வாக்குறுதி குறித்து மவுனம் காத்து வருவதால், கடந்த மாதம் 16ம் தேதியில் இருந்து 2ம் கட்டப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இந்தப் போராட்டம் இன்று 18வது நாளாக நடைபெற்று வருகிறது.

அடிமைச் சங்கிலி அணிந்து ஊர்வலம்
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நேற்று உடலில் அடிமைச் சங்கிலியை அணிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

மருத்துவமனையில் விவசாயிகள்
இதற்கிடையே, போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடிமைபோல் நடத்தும் அதிகாரிகள்
டெல்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். அதனால் அடிமைச் சங்கிலி போட்டுப் போராட்டம் நடத்தியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

கனிமொழி சந்திப்பு
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி டெல்லி சென்று போராடும் விவசாயிகளை இன்று சந்தித்துப் பேசினார். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான இருவரும் ஆலோசித்துள்ளனர். விவசாயிகள் நடத்திய முதல் கட்ட போராட்டத்தில் கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications