ஜெ. பற்றி தப்பாக பேசாதீர்கள்.. நாம் இந்தியர்கள்.. கன்னடர்களுக்கு சிவராஜ்குமார் குட்டு #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் இன்று கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
பெங்களூரிலுள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், ரமேஷ் அரவிந்த், ஜக்கேஷ், உபேந்திரா, நடிகைகள் தாரா, ஸ்ருதி, ராகினி திவேதி, பாரதி விஷ்ணுவர்த்தன், லீலாவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சுதீப் சூட்டிங்கிற்காக வெளி மாநிலத்தில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை.

இதில் பேசிய நடிகர், நடிகைகள், பெரும்பாலானோர் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் தாக்கி பேசுவதிலேயே குறியாக இருந்தனர்.
ஆனால், நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ளவருமான சிவராஜ்குமார், ஜெயலலிதாவை தாக்கி பேசக்கூடாது என மேடையில் வைத்தே வேண்டுகோள்விடுத்தார்.
சிவராஜ்குமார் பேசுகையில், கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த மாநிலத்தின் நலனை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
சுதீப் வரவில்லை என்றாலும் அம்பரீஷ் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை., திரையுலகை சேர்ந்த ஒருவர் வந்தாலும் அது பிறர் வந்ததற்கு சமம்தான். எனவே திரையுலகினரை குறை சொல்லாதீர்கள்.
நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு சரியில்லை. நல்லவர்களை ஆளுவதற்கு தேர்ந்தெடுங்கள். அல்லது வாக்களிக்க போகாதீர்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, கர்நாடகா நன்மைக்காக திடமான முடிவுகளை எடுத்தார். இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் "ஜெயலலிதா எப்போது பார்த்தாலும் இப்படியே செய்துகொண்டுள்ளார்.." என கூறி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதை கேட்ட சிவராஜ்குமார் பொதுக்கூட்ட மேடையில் இருந்தபடியே அதை கண்டித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும், பெண் என்பவர் பெண்தான். எனவே இப்படி தரக்குறைவாக பேசும் வேலையை வைத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாடு நமது பக்கத்து மாநிலம்தான். 1500 கி.மீ தொலைவிலுள்ள வேறு நாடு கிடையாது. நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை மனப்பான்மை நமக்கு வர வேண்டும்.
கர்நாடகாவை போலவே தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர். ஒரு விவசாயியின் கஷ்டம் மற்றொரு விவசாயிக்கு நன்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு சிவராஜ்குமார் பேசினார். அவர் பேச ஆரம்பிக்கும் முன்பு அவரை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டதால் கோபமடைந்த சிவராஜ்குமார், வாயை மூடிக்கொண்டு உட்காருமாறு ரசிகர்களை பார்த்து கோபமாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications