கர்நாடகா தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும்.. பாபா ராம்தேவ் பரபர!
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபையின் 222 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.
தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சற்றுமுன் நிலவரப்படி பாஜக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

நாடு முழுவதும் எதிர்ப்பார்ப்பு
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

ஆட்சியை கைப்பற்றும்
இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும்.

தேசிய அரசியலில் திருப்பம்
பாஜக வெற்றி பெற்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். இது தேசிய அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ் பரபர பேச்சு
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் பாபா ராம்தேவின் இந்த பரபர பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications