கர்நாடகா: 11 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்த காங்.! ஒருத்தருக்கு கூட சீட் தராத பாஜக- வெடித்த அதிருப்தி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த 189 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை என்பது சர்ச்சையாகி உள்ளது. மேலும் பல தொகுதிகளில் சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது. கர்நாடகா தேர்தல் களம் எப்போதும் போல அனல் பறந்து கொண்டிருக்கிறது.

காங். வேட்பாளர் பட்டியல்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஏற்கனவே ஜேடிஎஸ், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலுமே வேட்பாளர்கள் பட்டியலில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அண்மையில் 166 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 11 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என அதிருப்தி குரல்கள் எழுந்தன. இது தொடர்பாக கர்நாடகா சன்னி உலாமா வாரியத்தின் நூரி கூறுகையில், காங்கிரஸ் கட்சியானது 25 முதல் 30 முஸ்லிம்களை வேட்பாளர்களாக அறிவிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் 11 பேரை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இது முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம். துணை முதல்வர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு தர வேண்டும் என்றார்.
பாஜக வேட்பாளர் பட்டியல்: இந்நிலையில் 189 வேட்பாளர்களுடன் பாஜக நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மூத்த தலைவர்களான சோமண்ணா, அசோக் ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்திருந்தது. மேலும் 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை. இது தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவிடம் நேற்று இரவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் மழுப்பலான பதிலை கூறினார். இதர மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதுதான் தேஜஸ்வி சூர்யாவின் பதில்.

முஸ்லிம் இடஒதுக்கீடு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒக்கலிகா, லிங்காயத்து ஜாதிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இது முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என அக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது. தற்போது முஸ்லிம் ஒருவரை கூட வேட்பாளராக பாஜக அறிவிக்காதது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும் என்பது ஒருதரப்பு கருத்து. அதேநேரத்தில் இந்துக்கள் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் பாஜகவின் இந்த யுக்தி கை கொடுக்கலாம் எனவும் மற்றொரு தரப்பு கூறுகிறது.
பாஜக தலைமைக்கு எதிராக போராட்டம்: இதனிடையே 189 பேர் கொண்ட இந்த பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக தலைமைக்கு எதிராக சிட்டிக் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் நேற்று இரவு முதலே பல இடங்களில் போராட்டங்களை நடத்த தொடங்கிவிட்டனர். பெலகாவியில் ராம்துர்க் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. மகாதேவப்பாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அண்மையில் பாஜகவில் இணைந்த சிக்க ரேவணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக பாஜக தொண்டர்கள் நேற்று இரவு போராட்டம் நடத்தினர். பெலகாவி வடக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ஆதாவாளர்களும் இதேபோல் போராட்டம் நடத்தினர்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications