கர்நாடகா: தாத்தா, அப்பா, அம்மா எம்.எல்.ஏ.வான அதே ராமநகர் தொகுதி.. குமாரசாமி மகன் நிகில் போட்டி!

Subscribe to Oneindia Tamil

ராமநகர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் தாத்தா, அப்பா, அம்மா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரம்பரை தொகுதியான ராமநகரில் அம்மாநில முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கும்.

2018 தேர்தல் நிலவரம்

2018 தேர்தல் நிலவரம்

கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 107 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 78, ஜேடிஎஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றது. ஆனாலும் பெரும்பான்மைக்கான இடங்கள் இல்லாததால் பாஜகவால் முதலில் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி 14 மாதங்கள் நீடித்த நிலையில் கவிழ்க்கப்பட்டு பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றியது. பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸால் தற்போது அக்கட்சிக்கு சட்டசபையில் 119 எம்.எல்.ஏக்கள்; காங்கிரஸுக்கு 69; ஜேடிஎஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

காங்- பாஜக

காங்- பாஜக

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவில் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் முட்டி மோதுகிற நிலைமைதான் உள்ளது. இத்தனை கோஷ்டி பூசல்களுக்கு இடையே எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்கிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தம் பக்கம் கொண்டு வர காங்கிரஸும் முயற்சிக்கிறது.

ஜேடிஎஸ் யாத்திரை

ஜேடிஎஸ் யாத்திரை

கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் ஜேடிஎஸ்-ன் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா வாக்குகள், காங்கிரஸுக்கு கணிசமான மடைமாறியது. இதனால் அக்கட்சி கடும் அதிர்ச்சி அடைந்து போனது. இதனை சரிகட்ட இப்போது குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. ஊசலாட்டத்தில் இருக்கும் ஒக்கலிகா சமூக வாக்குகளை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறார் குமாரசாமி. இந்த யாத்திரையில் ஒட்டுமொத்த குமாரசாமி குடும்பமே இணைந்துள்ளது.

நிகில் குமாரசாமி போட்டி

நிகில் குமாரசாமி போட்டி

ஒக்கலிகா சமூகம் பெரும்பான்மையினராக இருக்கும் ராமநகர் தொகுதியில் பஞ்சரத்னா யாத்திரையின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் குமாரசாமி மனைவியுமான அனிதா குமாரசாமி மகன் நிகிலுடன் கலந்து கொண்டார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிட்டு பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுமலதாவிடம் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் ராமநகரில் பேசிய அனிதா குமாரசாமி, ராமநகர் தொகுதியில் இம்முறை நிகில் போட்டியிடுவார்; அவரது தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் எனக்கும் ஆதரவு அளித்ததைப் போல நிகில் குமாரசாமிக்கும் வாக்களித்து எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பரம்பரை தொகுதி

பரம்பரை தொகுதி

ராமநகர் தொகுதியில் 1994-ல் முன்னாள் பிரதமர் தேவகவுடா; 2004, 2013-ல் அவரது மகன் குமாரசாமி, 2018-ல் குமாரசாமி மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றனர். இம்முறை தேவகவுடாவின் பேரனுன் குமாரசாமி- அனிதா மகனுமாகிய நிகில் குமாரசாமி போட்டியிட உள்ளார். அனிதா குமாரசாமியின் நிகில் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு கர்நாடகா தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+