சித்தராமையாவுக்கு செம ஆதரவு.. பரிதாப இடத்தில் எதியூரப்பா.. லோக்நிதி சர்வே
பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் சித்தராமையாவே முதல்வராக லோக்நிதி -சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் எதியூரப்பாவுக்கு ஆதரவு மிகவும் குறைவாக காணப்படுகிறது. அவருக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் எச்.டி,குமாரசாமிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் சில:

சித்தராமையாவுக்கு செல்வாக்கு
சித்தராமையா முதல்வராக 34 சதவீத ஆதரவு கி்டைத்துள்ளது. ஆனால் பாஜகவால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எதியூரப்பாவுக்கு வெறும் 14 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இவருக்கு முன்பு குமாரசாமி 19 சதவீத ஆதரவுடன் உள்ளார்.

கார்கேவுக்கும் ஆதரவு
அதேசமயம், யாரும் எதிர்பாராத அளவு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கணிசமான ஆதரவு காணப்படுகிறது. அதாவது 10 சதவீத ஆதரவு கார்கேவுக்குக் கிடைத்துள்ளது.

பெண்கள் ஆதரவு அதிகம்
சித்தராமையாவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அதிலும் நகரங்களில், சிறிய ஊர்களில் சித்தராமையாவுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளது.

பெங்களூர் சித்து பக்கம்
பெங்களூரு நகரில் சித்தராமையாவுக்கு அதிக ஆதரவு உள்ளது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரே மாதிரியான ஆதரவு காணப்படுகிறது.

ஜாதி தான் முக்கியம்
கர்நாடக அரசியலில் ஜாதி வாக்குகள் ரொம்ப முக்கியம். அந்தந்த ஜாதிக்காரர்களின் வாக்கு அந்தந்த ஜாதித் தலைவர்களுக்கே போகும். அந்த வகையில் லிங்காயத்துகளின் வாக்கு எதியூரப்பாவுக்கு போகிறது. ஒக்கலிகா வாக்கு குமாரசாமிக்கு போகிறது. கார்கேவுக்கு அவர் சார்ந்த தலித் மற்றும் பிற சமூக குழுக்களின் வாக்குகள் கிடைக்கின்றன.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications