ஜெ. வழக்கில் தீர்ப்பு.. உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பெங்களூருவிலுள்ள கர்நாடக போலீஸ் இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், போலீஸ் டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இது வழக்கமான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் என்றபோதிலும், வரும் திங்கள்கிழமை, கர்நாடக ஹைகோர்ட், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்போவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக பெங்களூருவை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம், பாதுகாப்பு விஷயத்தில் உஷாராக இருக்கும்படி சித்தராமையா உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பெங்களூரு போலீசார் சிறப்பாக மேற்கொண்டதாக அப்போது சித்தராமையா பாராட்டு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
