பிழையை சரி செய்ய 3 முறை முயன்றார் நீதிபதி குமாரசாமி.. தடுத்தார் தலைமை நீதிபதி?
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஏற்பட்டுள்ள கணித பிழையை கூட நீதிபதி குமாரசாமி திருத்த முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். இதை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு ஆச்சாரியா சிபாரிசு செய்துள்ளார்.

அதிகாரம் உள்ளது
இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் கருத்துப்படி, கணித தவறை திருத்த ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமிக்கு உரிமையுள்ளது என்று கூறப்பட்டது. அதே நேரம் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது. மற்ற வழக்குகளை ஒப்பிடும்போது, இந்த வழக்கில், ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதால், கணித தவறையும் சரி செய்ய முடியாத நிலையில் குமாரசாமி இருந்தார்.

தவறை சரி செய்தாலும்..
அதாவது, கணித தவறை சரி செய்தால், தீர்ப்பே தவறு என்ற சூழ்நிலை உருவாகிவிடும். ஏனெனில், கணக்கை சரி செய்தால், ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக 75.76 சதவீதம் சொத்து குவித்ததாக நீதிமன்றம் கூறியதாகிவிடும். அப்படி சொத்து குவித்தவரை எப்படி விடுதலை செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துவிடும்.

வழக்கறிஞர் வருகை
இந்நிலையில்தான், தீர்ப்பின் தவற்றை சுட்டிக் காட்டி சரி செய்ய கோருவதற்காக, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி, இன்று ஹைகோர்ட் வந்தார். இவர் இரு நாட்கள் முன்பே வர இருந்ததாகவும், அதிமுகவினர் கடத்தி சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவராகும்.

3 முறை முயற்சி
உயர்நீதிமன்ற பதிவாளர் பாட்டீலிடம் புகார் கொடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கு ஹைகோர்ட்டில் வேறு மாதிரியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவரே கூறியதாவது: தீர்ப்பின் கூட்டலில் தவறு இருப்பது தெரிந்து, நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை திருத்த 3 முறை முயன்றதாகவும், ஆனால் ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா, தீர்ப்பை திருத்த கூடாது என்று கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் என்னிடம் தெரிவித்தனர்.

தீர்ப்பே மாறிவிடுமே
ஏனெனில், கூட்டல் கணக்கை திருத்தினால், தீர்ப்பையே திருத்த வேண்டிவரும் என்பதால், தீர்ப்பை திருத்தும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டி, தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். எனவே நானும் இதுகுறித்து ஹைகோர்ட்டில் புகார் கொடுத்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சந்திக்க மறுப்பு?
இந்த விவகாரம் குறித்து, நீதிபதி குமாரசாமி தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றதாகவும், ஆனால், அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், தீர்ப்பை மாற்ற அனுமதி இல்லை என்பதை மட்டும் அழுத்தமாக கூறிவிட்டதாகவும் ஹைகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்ப்பையோ, கணித தவறையோ இனி சுப்ரீம்கோர்ட்தான் மாற்றி எழுத வேண்டிவரும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications