For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் கிடக்கட்டும்.. காங்கிரசுக்குதான் நான் கடமைப்பட்டுள்ளேன்- குமாரசாமி ஷாக் பேட்டி

நான் கடன்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமேயொழிய, 6.5 கோடி கர்நாடகா மக்களுக்கு அல்ல என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: நான் கடமைப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தவிர 6.5 கோடி கர்நாடகா மக்களுக்கு அல்ல என்று மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தலில் மஜத கட்சிக்கு வாக்களித்தால் கூட்டுறவு, தனியார் மற்றும் இதர வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Karnataka CM H.D. Kumarasamy says that he is obligated to Congress only

இந்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு குமாரசாமி பதிலளிக்கையில் கடன் தள்ளுபடி செய்வது குறித்து எனக்கு ஒரு வார காலஅவகாசம் தேவைப்படுகிறது.

அதற்கு முன்னர் மாநில அரசின் நிதி நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும். இது அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்னர்தான் நடைபெறும். நான் ஒருவாரத்தில் செய்து முடிக்கிறேன். இல்லாவிட்டால் முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன்.

அதுவரை விவசாயிகள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் பேசுவதை எடியூரப்பா தவிர்க்க வேண்டும். தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடமைப்பட்டுள்ளேன். கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கு அல்ல. எனவே கூட்டணி கட்சியினரை ஒப்புதலின்பேரில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

English summary
Karnataka CM H.D.Kumarasamy says that he is obligated to Congress only not for 6.5 crores of people's of Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X