காவிரி நீர் தரலாமா வேணாமா? - வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைப்படி செயல்பட கர்நாடக அரசு முடிவு
காவிரி விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வழிகாட்டுதலின் படி செயல்பட முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அனைத்து கட்சியினரிடமும் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார். மேலும் காவிரி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்ட போதும், கர்நகாடகாஅரசு பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறந்துவிடவில்லை.
இந்நிலையில் பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை தமிழகம்,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கூறியிருந்தது.
இதன் அடிப்படையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதற்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பசவராஜ், அமைச்சர்கள், எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் 4 மாநிலங்கள்எவ்வாறு நீரை பகிர்ந்து கொள்வது என்று அரசியல்கட்சியினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பற்றாக்குறை கால நீரை பகிர்ந்துகொள்வதற்கான குழுவை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications