கர்நாடகாவில் இரவு பயணம் மேற்கொள்ளப்போகிறீர்களா? முதல்வர் கருத்தையும் பாருங்கள்
மைசூர்: இரவு நேரத்தில், வன விலங்கு பாதுகாப்பு மண்டலங்களில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நாகர்ஹோலே புலிகள் சரணாலயத்திற்கு உற்பட்ட பகுதியில் உள்ள யானைகள் முகாமை சேர்ந்த ரவுடி ரங்கா என்று பெயர் சூட்டப்பட்ட காட்டு யானை சமீபத்தில் பஸ்சில் அடிபட்டு உயிரிழந்தது.
இந்த யானை பெங்களூர் ஊரக மாவட்டம், மாகடி அருகே, சுற்றி திரிந்து, துவம்சம் செய்தது. இதையடுத்து யானையை பிடித்து இந்த சரணாலயத்திற்கு வனத்துறையினர் அனுப்பியிருந்தனர்.
[அமெரிக்காவின் மிரட்டல்களை வரிசையாக புறக்கணிக்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன?]

கேரளா சாலை
நாகர்ஹோலே புலிகள் சரணாலயம் என்பது, கேரள மாநிலம் கன்னூர்- கர்நாடக மாநிலம் மைசூர் நடுவேயான மாநில நெடுஞ்சாலை அருகே வருகிறது. அங்கு இரவு நேரத்தில், நடந்த சோகம் இதுவாகும்.

தடை இல்லை
கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் (முதுமலை), மலே மாதேஸ்வரா மலைப்பகுதி, காளி புலிகள் சரணாலயம், பத்ரா புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கன்னூர்-மைசூர் மாநில நெடுஞ்சாலையில் இவ்வாறான தடை இல்லை.

தனியார் பஸ்
இந்த நிலையில்தான், கன்னூரிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பஸ், அதிகாலை 3.30 மணிக்கு யானை மீது மோதியுள்ளது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் இஸ்மாயில் நலகாத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் கருத்து
இதுகுறித்து, முதல்வர், குமாரசாமி வெளியிட்ட ட்வீட்டில், ரங்கா யானை உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க இரவு நேரத்தில், வனப்பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் கேரள அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications