நெருங்கும் கர்நாடகா தேர்தல்... வைரலாகும் வாக்காளர் அட்டை மாடலில் திருமண அழைப்பிதழ்!
கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை மாடலில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடகாவில் அடுத்தமாதம் 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போட்டிபோட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹங்கல் நகரைச் சேர்ந்த சித்தப்பா தோத்தசிக்கன்னவர் என்ற இளைஞர் தனது திருமண அழைப்பிதழை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற தோற்றத்தில் வித்தியாசமாக அச்சடித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தோத்தசிக்கன்னவருக்கும், ரனிபென்னுரு நகரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும்,இம்மாதம் 27ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண அழைப்பிதழில் மணமக்களின் புகைப்படமும், வாக்காளர் பெயர் என்ற இடத்தில் இருவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் இருக்கும் இடத்தில் 'SJMRG27042018’ என்ற எண் உள்ளது. இது மணமக்களின் இனிஷியல் எழுத்துக்களையும், அவர்களது திருமண நாளையும் குறிக்கிறது.
அதோடு, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்தத் திருமண அழைப்பிதழில், 'ஓட்டு முக்கியத்துவம் வாய்ந்தது, குடும்பத்துடன் வாக்களிக்க மறந்துவாதீர்’ என்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
கன்னட செயல்பாட்டாளரான சித்தப்பா, ரயில்வே பணியாளர் ஆவார். தனது வித்தியாசமான இந்தத் திருமண அழைப்பிதழை தனது உறவினர்கள், கர்நாடக அரசியல் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு சித்தப்பா வழங்கி வருகிறார்.
இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications