மாநில அமைச்சர்னா தாழ்ந்தவர்களா.. நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக துணை முதல்வர் கடும் கண்டனம்
பெங்களூரு: மத்திய அமைச்சருக்கு எந்த வகையிலும் மாநில அமைச்சர்கள் தாழ்ந்தவர்கள் கிடையாது. இருவரும் சமம் . இதை நிர்மலா சீதாராமன் புரிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா கூறியுள்ளார்.
கர்நாடக அமைச்சர் சாரா மகேஷிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி கோபப்படுகிறார் நிர்மலா சீதாராமன். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பேசி விடுகிறார்.

குடகு மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த அவர் கர்நாடக அரசின் குடகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாரா மகேஷிடம் கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அமைச்சர் சொல்வதை மத்திய அமைச்சர் கேட்க வேண்டியிருக்கு என்று அவர் கூறியது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Madam @nsitharaman, our ministers have stayed back in Kodagu for weeks to oversee relief operations along with district administration. You should extend to them the same respect that they extend for the help from your end. It was disappointing to see you lash out at my colleague
— Dr. G Parameshwara (@DrParameshwara) August 25, 2018
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரா் ஜி. பரமேஸ்வரா காட்டமாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், மேடம் நிர்மலா சீதாராமன், பல வாரங்களாக எங்களது அமைச்சர்கள் குடகில் தங்கியிருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணப் பணிகளைப் பார்த்து வருகின்றனர். நீ்ங்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்க வேண்டும். எனது சக அமைச்சரை நீங்கள் நடத்திய விதம் பெரும் ஏமாற்றம் தருகிறது.
State Governments derive their powers from our Constitution not from the Centre. The Constitution has distributed powers among the Centre and States to ensure an equitable partnership between both. We are not inferior to the Centre. We are partners @nsitharaman
— Dr. G Parameshwara (@DrParameshwara) August 25, 2018
அரசியல்சாசனம்தான் மாநில அரசுகளுக்குரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது, மத்திய அரசு அல்ல. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரங்களைத்தான் அரசியல்சாசனம் வழங்கியுள்ளது. நாங்கள் ஒன்றும் மத்திய அரசுக்கு தாழ்ந்தவர்கள் இல்லை. இருவரும் பங்காளளர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் பரமேஸ்வரா.












Click it and Unblock the Notifications