கர்நாடகா: முதல்வர் பதவிக்கு மக்களின் சாய்ஸ் சித்தராமையாவா? எடியூரப்பாவா? ஏபிபி சர்வேயில் சுவாரசியம்
கர்நாடகாவின் முதல்வராக சித்தராமைய்யாவிற்கு 30 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் சித்தராமைய்யாவே முதல்வராகவேண்டும் என்று விரும்புவதாக
30 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளதாக ஏபிபி சர்வே கூறியுள்ளது. எடியூரப்பா முதல்வராக 25 சதவிகிதம் பேரும், மஜதவின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமிக்கு 20 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளில் எந்த கட்சியை ஆட்சியை பிடிக்கும் என்ற விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அதிகம் என்று ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியின் சர்வே முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அடுத்த 5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தப் போவது யார் என்ற முடிவை மக்கள் தெரிவிக்க உள்ளனர். தென் மாநிலங்களில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடக்க உள்ள தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என்று ஏபிபி சர்வே கூறுகிறது. தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என சர்வே கூறினாலும் சித்தராமையாவிற்கே ஆதரவு அதிகம் எனவும் அந்த சர்வே கூறியுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் சித்தராமைய்யாவே முதல்வராகவேண்டும் என்று விரும்புவதாக 30 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளதாக ஏபிபி சர்வே கூறியுள்ளது. எடியூரப்பா முதல்வராக 25 சதவிகிதம் பேரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமிக்கு 20 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சித்தராமையாவுக்கு ஆதரவு அதிகம் என்றாலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. எடியூரப்பாவைவிட மோடிக்காகவே கர்நாடகாவில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications