கர்நாடக தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா? மார்க்கிடம் உறுதிமொழி கேட்ட மத்திய அரசு!
கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா என்று பாஜக கட்சி விளக்கம் கேட்டு இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா என்று பாஜக கட்சி விளக்கம் கேட்டு இருக்கிறது. இதற்காக பேஸ்புக் அமைப்பிடம் மத்திய அரசு உறுதி மொழி கேட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடிய பிரச்சனை காரணமாக அவர் இப்படி பேசி இருந்தார்.
பிரபல சேனல் 4 தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இது இந்திய தேர்தலிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்
உலகம் முழுக்க நடந்த பல தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. தகவல் திருட்டு மூலம் பேஸ்புக் மக்களின் கருத்துக்களை மாற்றி இருக்கிறது. முக்கியமாக அமெரிக்க தேர்தல், இந்திய நாடாளுமன்ற தேர்தல், பிரிக்சிட் ஆகிய தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.

இந்திய தேர்தலிலும்
இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. பாஜக கட்சிதான் பேஸ்புக்கின் முக்கியமான வாடிக்கையாளர் என்றும் தகவல் வெளியானது. இதனால் பாஜக கட்சி, தற்போது நடக்க இருக்கும் கர்நாடக தேர்தலிலும் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உறுதி அளித்தார்
இதையடுத்து சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். வாக்காளர்களின் கருத்துக்களை மாற்றும் எந்த விதமான செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். இனி வரும் எந்த தேர்தலிலும் இதுபோன்ற மோசடிகளை செய்ய மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

பாஜக உறுதிமொழி
இந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவும், பாஜக கட்சியும் பேஸ்புக்கிடம் உறுதிமொழி வாங்கி இருக்கிறது. அதன்படி பேஸ்புக் தற்போது மத்திய அரசிடம் உறுதிமொழி வாக்குமூலம் அளித்து இருக்கிறது. கர்நாடக தேர்தல் தொடங்கி இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தலிலும் முறைகேடு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது. ஆனாலும் இதில் முறைகேடு நடக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications