பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம்.. வெளிநாட்டு சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கும் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
தற்போது கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். ஆனால் அவர் சென்ற விமானம் பாதி வழியில் பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.

உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே, விமானம் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. முக்கியமாக ஒரு பக்கம் சரிந்து, கீழே வேகமாக சென்றது, விமானத்தை எவ்வளவு முயன்றும் விமானிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு முறை முயற்சித்தும் கூட விமானத்தை தரையிறக்க முடியவில்லை. பின் கடைசி நேரத்தில் மூன்றாவது முறையாக முயற்சித்து, ஹப்ளி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்கள். இதில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த பிரச்னைக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்து இருக்கிறது. ராகுலை அழிப்பதற்கு திட்டமிட்டு இந்த வேலையை செய்து இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். ஆனால் இது விமானத்தில் ஏற்பட்ட சிறிய ''ஆட்டோ பைலட்'' எனப்படும் தானியங்கி விமான பிரச்சனை என்றும் கடைசி நேரத்தில் விமானி தானாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போதுதான் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சனை கர்நாடக தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications