கர்நாடக தேர்தல்: 5 நாள் சுற்றுப்பயணம்.. பிரச்சார களத்தில் இறங்கினார் பிரதமர் மோடி!
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வர உள்ளார்.
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வர உள்ளார். இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஐந்து நாட்கள் கர்நாடகாவில் இருப்பார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக இதுவரை பாஜக, காங்கிரஸ் போன்ற எல்லா கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து, வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டது. பாஜக இதற்காக, அந்த கட்சியின் தேசிய முகங்களை களமிறக்க இருக்கிறது.
இன்னும் பிரச்சாரம் முடிய 10 நாட்களே மீதம் இருக்கிறது. இதனால் பிரதமர் மோடி இன்று கர்நாடகா வந்து தன்னுடைய பிரச்சாரத்தை நடத்த இருக்கிறார். மொத்தம் 5 நாட்கள் இவர் பிரச்சாரம் செய்வார். 15 இடங்களில் மேடை போட்டு இவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
இன்று உடுப்பி பகுதியில் இருந்து இவர் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். ஆனால் குஜராத், உத்தரபிரதேசம் போல இல்லாமல் மிகவும் குறைந்த நாட்களே இவர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்கிறார். இது அம்மாநில பாஜகவினர் இடையே வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
மோடி வருகையையொட்டி கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் யோகி ஆதித்யநாத், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவின் மற்ற தலைவர்களும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளில் ஒன்று தொங்கு சட்டசபை அமையும் இல்லை பாஜக தோல்வி அடையும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது பாஜகவினர் இடையே உற்சாக இழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோடியின் பிரச்சாரம் அதை மாற்றுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications