கர்நாடகா சட்டசபை தேர்தல்: சாம்ராஜ் நகர் சென்டிமென்ட் பீதி.. எட்டிப்பார்க்காமல் எஸ்கேப்பான மோடி
சாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட் இசாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட்க்கு மோடியும் விதி விலக்கு அல்ல.
பெங்களூரு: கர்நாடகா அரசியல் களத்தில் சாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட் இருக்கிறது. இதனால்தான் பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை சாம்ராஜ்நகரில் பாஜகவினர் ஏற்பாடு செய்யவில்லை.
சாம்ராஜ்நகர் நகரத்துக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோகும் என்பது கர்நாடகா அரசியலின் நீண்டகால நம்பிக்கை. முன்னாள் முதல்வர்கள் தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பாட்டீல் மற்றும் குமாரசாமி ஆகியோர் சாம்ராஜ்நகர் பயணங்களுக்குப் பின்னர்தான் பதவியை பறிகொடுத்தனராம். 2007ம் ஆண்டு சாம்ராஜ்நகருக்கு குமாரசாமி சென்று திரும்பிய போதுதான் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதேபோல் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவ கவுடா, ஜேஎச் படேல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், எதியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் பதவி காலங்களில் சாம்ராஜ்நகர் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை. 1998ம் ஆண்டு மைசூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சாம்ராஜ்நகர் உருவாக்கப்பட்டது. இதற்கான விழாகூட சாம்ராஜ்நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளேகால் மலையில்தான் நடந்தது. அப்போதைய முதல்வர் ஜே.எச். படேல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால் தற்போதைய முதல்வர் சித்தராமையாவோ இந்த மூடத்தனத்தை உடைக்கும் வகையில் சாம்ராஜ்நகருக்கு பல முறை பயணம் மேற்கொண்டு விட்டார். அப்போதெல்லாம் ஊடகங்களிடம் இந்த மூடநம்பிக்கையை கடுமையாக விமர்சிக்கவும் தயங்கியது இல்லை. சாம்ராஜ் நகருக்கு 11 முறை வந்து சென்றுவிட்டேன்; நான் இன்னமும் பதவியில்தானே நீடிக்கிறேன் என கூறிவந்தார் சித்தராமையா. தமது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்து பல ஆண்டுகால மூடநம்பிக்கையை தகர்த்தவர் சித்தராமையா.
இருப்பினும் பாஜகவினர் பீதியில்தான் பிரதமர் மோடிக்கு சாம்ராஜ்நகரில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் சந்தேமரஹனள்ளியில் நடத்தி உள்ளனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications