2 வருடங்களுக்கு பிறகு பிரச்சார களத்தில் சோனியா காந்தி.. கர்நாடகாவில் உற்சாக உரை
கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: 2 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார் சோனியா காந்தி. கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முக்கியமான தலைவர்கள் எல்லோரும் இப்போது அந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் இன்று செய்தார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அவர் 2016 ஆகஸ்டில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாதியில் பிரச்சாரம் செய்யாமல் வெளியேறினார். 71 வயது நிரம்பியுள்ள அவர் அதன்பின் பிரச்சாரம் செய்யவில்லை.
குஜராத் தேர்தல், திரிபுரா தேர்தல், உத்தரகான்ட், மணிப்பூர், மத்திய பிரதேசம், நாகலாந்து, பஞ்சாப், கோவா என எந்த தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவே இல்லை. இந்த நிலையில்தான் இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
பிஜப்பூர் தொகுதியில் இன்று மட்டுமே பிரச்சாரம் செய்தார். இனி பிரச்சார செய்ய மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மே 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது இந்த பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மேலும் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவரது வருகைக்காக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இவரது பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்குர் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். அதேபோல் உடன் இருந்து மருத்துவர்கள் அவரை பார்த்துக் கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications