கர்நாடக தேர்தல்: புயலை கிளப்பும் போலி வாக்காளர் அட்டைகள்.. பாஜக காங்கிரஸ் இடையே முற்றும் மோதல்
கர்நாடக தேர்தலில் போலீஸ் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக தேர்தலில் போலீஸ் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. நேற்று ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் புதிய பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலில் போலீஸ் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. நேற்று இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 20,000 போலி வாக்காளர் அடையாள அட்டை நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன் கூடுதலாக 9,000 உண்மையான வாக்காளர் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் அந்த அறையை சோதனையிட்ட போது, அதனுள் யாருமே இல்லை என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனால் விசாரணையை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தேர்தல் ஆணையம் குழம்பிப் போய் உள்ளது.
இந்த செயலுக்கு பின்பாக காங்கிரஸ் இருக்கிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏதான் இந்த மோசடியை செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளது. அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இதனால் நேற்றில் இருந்து பாஜக டிவிட்டரில், காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.
அதேசமயம் காங்கிரஸ் இதில் புதிய ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கூறியுள்ளது. அவர்தான் இந்த மோசடிக்கு காரணகர்த்தா என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications