தமிழகத்துக்கு இனி காவிரி நீர் திறக்க முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு!
வறட்சியால் தமிழகத்துக்கு இனி காவிரி நீரை திறக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்துக்கு இனி காவிரி நீரை திறந்துவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே நடுவர் மன்ற உத்தரவு தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகள் தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் கடந்த 9-ந் தேதியன்று, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முகாந்திரம் உள்ளது. அத்துடன் டிசம்பர் 15-ந் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே போதுமான நீர் இல்லை; ஆகையால் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது என கூறியுள்ளது.
இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications